கே.ஏ.எல். ஏர்வேஸ் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் ஸ்பைஸ்ஜெட் மற்றும் அதன் தலைவர் அஜய் சிங்கிடம் இருந்து  ரூ.1,323 கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கோருவதாகவும், இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் சர்ச்சையில் சமீபத்திய டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்பைஸ்ஜெட்டும், கலாநிதிமாறன்:


கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாதரராக இருந்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டில் அஜய் சிங் என்பவர் கலாநிதி மாறனிடமிருந்து  பெற்றார். அப்பொழுது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கான வழக்கு 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இதனால் அந்த நிறுவனம் 70 மில்லியன் டாலரை கலாநிதி மாறனுக்கு செலுத்த வேண்டியிருந்தது.


அதன்பின் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடமிருந்து 48 மில்லியன் டாலர் பாக்கி உள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கலாநிதி மாறனுக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்பி கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


உயர்நீதிமன்ற உத்தரவு:


டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. அதாவது, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவனத்துடனான சர்ச்சைக்கு நடுவர் மன்ற தீர்ப்பை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.


ரூபாய் 1323 கோடி நஷ்ட ஈடு:


இந்த தீர்ப்பை எதிர்த்து கலாநிதி மாறன் மற்றும் கே.ஏ.எல் நிறுவனம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குளறுபடியாக உள்ளது என்றும் ரூ.1323 கோடி நஷ்டஈடு கோறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான சவால் மற்றும் சேதத்திற்கான கோரிக்கை ஆகிய இரண்டையும் தொடர்வதன் மூலம், சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என கலாநிதி மாறன் நம்பப்படுவதாக கூறப்படுகிறது.