உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி வரும் நவம்பர் 8ம் தேதிவரை பதவியில் இருப்பார் எனபது குறிப்பிடத்தக்கது. 


உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.






வழக்கமாக பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதி, தனக்குப் பின்னர் தலைமை நீதிபதியாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்வார். இந்த வழக்கமான நடைமுறையின் அடிப்படையில் தனக்குப் பின்னர்  யார் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துறை ஏற்கனவே தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணாவிற்கு  கடிதம் எழுதியது. இதற்கு தற்போதைய  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை மத்திய சட்ட அமைச்சகத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியிருந்தார். புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்று, மொத்தம் 74 நாட்கள் மட்டும் பதவியில் இருப்பார் எனபது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைகிறது.



 

2ஜி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்

 

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யு.யு. லலித் மூத்த நீதிபதியாக இருந்த போது காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று சக நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பிறந்த யு.யு.லலித், தனது 27வது வயதில் 1983 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் 2014 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், 2ஜி வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.