Just In

பன்னீர் காலி ஆகிடுச்சு! திருமண பந்தியில் கடுப்பான இளைஞர்.. கடைசியல் நடந்த ஷாக்

சிறுவயதில் விட்டுச்சென்ற நீ ஏன் திரும்பி வந்தாய்? ... தாயைக் கடப்பாரையால் அடித்துக் கொன்ற மகன் - கும்பகோணத்தில் பயங்கரம்

24 மணி நேரமும் பெண்கள் பாதுகாப்பு - காவல் துறை கொண்டு வந்த சூப்பர் திட்டம் !! என்ன தெரியுமா ?

TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!

தென் மாநிலங்களில் இந்தி கற்க ஆர்வமாக உள்ளனர் - பாஜக மத்திய இணையமைச்சர்
Chennai Metro: 9.1 கி.மீ-க்கு கிட்டத்தட்ட எல்லாம் ரெடி.. போரூர்-பூந்தமல்லி மெட்ரோ.. இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி!
Morning News Wrap | 24.06.2021 இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

எஸ்ஐ._தாக்கியதில்_உயிரிழந்த_விவசாயி_முருகேசன்
- காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- சேலம், வாழப்பாடி அருகே விவசாயி தாக்கி கொலை – எஸ்.ஐ. மீது கொலை வழக்குப்பதிவு
- உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- விவசாயியை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம்
- எஸ்.ஐ. தாக்குதலில் விவசாயி உயிரிழந்த விவகாரம் – நான்கு வாரங்களில் பதிலளிக்க சேலம் சரக டி.ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக உறுதி செய்யப்பட்டது.
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 432 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று மட்டும் 396 நபர்களுக்கு மட்டும் புதியதாக பாதிப்பு
- கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
- சென்னையில் நேற்று டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது.
- ஆபாச பேச்சு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை, பண மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை.
- தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவ தேர்தலே காரணம் – மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து
- மீண்டும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் தொற்று பரவும் அபாயம் உள்ளது – நீதிபதிகள் எச்சரிக்கை
- புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி
- புதுச்சேரியில் புதிய அமைச்சரவை வரும் 27-ல் பதவியேற்பு – ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவிப்பு
- உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு – சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்
- உலகப் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயங்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.
- மேற்கு வங்கத்தில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
- இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடியைத் தாண்டியது. நேற்று மட்டும் நாடு முழுவதும் புதியதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டது.
- இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது.
- நேற்று ஒரே நாளில் மட்டும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது நியூசிலாந்து.
- யூரோ கோப்பை கால்பந்து – ஸ்வீடன், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 4 அணிகள் முன்னேற்றம்
- தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.