Ayodhya Ram Temple: அயோத்தி பிரச்னைக்கு முடிவு கட்டிய நீதிபதிகள்! இப்போ என்ன செய்றாங்க?

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் தற்போது என்ன பதவியில் உள்ளனர் என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.

Continues below advertisement

அயோத்தி வழக்கு:

 ராமர் கோயில் கட்டும் பொறுப்பு, ஓர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அறக்கட்டளையை மத்திய அரசே அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தி வழக்கில், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, ஒய்.வி.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளது.  இந்த நீதிபதிகள் யார்? தற்போது எந்த பொறுப்பில் உள்ளனர்? என்பதை பார்க்கலாம். 2019ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 பேரில், நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஒரு நீதிபதி இன்னும் உச்சநீமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். 

ரஞ்சன் கோகாய்:

அசாம் மாநிலத்தில் 1954ல் பிறந்தார் ரஞ்சன் கோகாய். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டப்படிப்பை முடித்த இவர், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். 1978ல் வழக்கறிஞராக பதிவு செய்த ரஞ்சன், 2001ல்  கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். இவர் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றினார்.

 இதன் பின், 2011ஆம் ஆண்டு ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற  ரஞ்சன், 2012ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டடார். இவர் 2019ல் ஓய்வு பெற்ற இவர்,  நான்கு மாதங்களுக்கு பிறகு அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  அவரை ராஜ்யசபாவுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 

எஸ்.ஏ.பாப்டே:

1956ல் நாக்பூரில் பிறந்தார் எஸ்.ஏ.பாப்டே. 1978ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து முடித்தார். தனது பணியை மும்பை நீதிமன்றத்தில் தொடங்கிய இவர், 1998ல் மூத்த வழக்கறிஞரானார். 2000ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பாப்டே, 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய  இவர், 23 ஏப்ரல் 2021ல் ஓய்வு பெற்றார். தற்போது மகாராஷ்டிரா தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார். 

அசோக் பூஷண்:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அசோக் பூஷண், 2001ல் அலகாபாத் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015ல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.  2016ல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2021ல் ஓய்வு பெற்றார். இதன்பிறகு, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியில் உள்ளார்.

 அப்துல் நசீர்:

மங்களூரைச் சேர்ந்த அப்துல் நசீர், 2003ல் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை நீதிமன்றத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பரியாற்றிய இவர், 2017ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023ல் ஓய்வு பெற்ற இவர், பிப்ரவரி 12 2023ல் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் எந்த ஒரு உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒய்.வி.சந்திரசூட்:

1982ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் ஒய்.சந்திரசூட். 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு, அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் . பின்னர், 2000ல் மும்பை  உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட  இவர், 2013ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2016ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2021ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொலீஜியத்தில் உறுப்பினர் ஆனார். 2022ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர்,  நவம்பர் 2024ல் வரை இப்பதிவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement