பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. சமீப காலமாக, பத்திரிகையாளர் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஜனவரி 25ஆம் தேதி, ஹோஷங்காபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது பத்திரிக்கையாளரை சிலர் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். சமீபத்தில், அந்த கும்பலுக்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கோபமடைந்த அந்த கும்பல் பத்திரிகையாளரை கட்டி வைத்த அறைந்துள்ளது.


இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது. இச்சூழலில், பத்திரிகையாளரை தாக்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையதளத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் பிரகாஷ் யாதவ், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "மனகானில் இருந்து விளம்பர முன்பதிவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கோட்கான் என்ற எனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.


அந்த சமயத்தில், ​​நாராயண் யாதவ் என்ற நபர் என்னை வழிமறித்தார். ஜனவரி 1 ஆம் தேதி எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் என்னை மோசமான வார்த்தைகளில் திட்டினர்.


அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது, ​​அவரது சகோதரர் நரேந்திர யாதவும், ஓம் பிரகாஷ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்து, என்னைத் தாக்கினர்" என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2018ஆம் ஆண்டு, ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.


பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


 






உலகம் முழுவதும் 2018 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 32 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் எல்சால்வாடோரை சேர்ந்த ஒரு பெண் செய்தியாளரும் அடங்குவார்.


கடந்தாண்டு, அதிகபட்சமாக மெக்சிகோவில் மட்டும் 11 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைனில் எட்டு செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு நாடுகளில், பத்திரிகையாளர்களை தாக்கும் போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிக்கம் விதமாக உள்ளது.