ஜம்மு காஷ்மீர் சிவ் கோரிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, ரியேசி மாவட்டத்திற்கு அருகே உள்ள, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயங்கரவாதிகள் சதியாக என சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்து:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் ஷிவ் கோரி கோவிலுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, இன்று ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பயங்கர விபத்தை சந்தித்தது. சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும் இதனால் பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளுடன் ஷிவ் கோரி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்தில் தாக்குதலுக்கு உள்ளானது என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 பேர் உயிரிழப்பு:
ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் இறந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ரியாசி மோஹிதா சர்மா உறுதிப்படுத்தினார். "சிவ் கோரியில் இருந்து கத்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு காரணமாக பேருந்து ஓட்டுநர் பேருந்து சமநிலையை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இச்சம்பவத்தில் 33 பேர் காயமடைந்தனர் மற்றும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியானது முடிவடைந்துவிட்டது, பயணிகளின் அடையாளம் பணியானது முடியவில்லை என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.
ராகுல் ட்வீட்:
ரியாசியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார், அதில் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கவலைக்கிடமான பாதுகாப்பு நிலைமையின் உண்மையான நிலையை உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.