Kashmir Accident: ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜம்மு காஷ்மீர் விபத்து:


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில்  இன்று காலை 6 மணியளவில் பல்மேட்கோட் என்ற பகுதியில் இருந்து படார் என்று கிராமத்திற்கு ஒரு கார் சென்றுக் கொண்டிருந்தது. இந்த காரில் 15 பேர் இருந்துள்ளனர்.  அப்போது, பல்மேட்கோட் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


அப்போது, பள்ளத்தாக்கில் சிக்கிய 15 பேரை மீட்கும் பணி நடைபெற்றது. உள்ளூர் மக்களும் விபத்து நடந்த உடனேயே மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்த 13 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 






இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிந்தவர் முகமது அஷ்ரப், தாஹிர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, கடந்த மாதத்தில் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு, தற்போது ரியாசி மாவட்டத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Corona JN.1 Variant: தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா.. இந்தியாவில் இதுவரை 63 பேருக்கு பாதிப்பு..


Edappadi Palanisamy : ‘ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி’ அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி. ஐ கட்சி..?