ஜம்மு – காஷ்மீர் நாட்டின் முக்கியமான எல்லைப் பகுதி என்பதால் அந்த பகுதியில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், காஷ்மீரில் அமைந்துள்ள பகால்கமிற்கு இந்தோ – திபெத் வீரர் எல்லைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பிரிஸ்லான் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தனர். 






அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தின் பிரேக் பிடிக்காமல் போயிவிட்டது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகே பாய்ந்து கொண்டிருந்த ஆற்றில் கவிழ்ந்தது. இந்த வாகனத்தில் சுமார் 30 ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ராணுவ வீரர்கள் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு பணிக்காக சந்தன்வாரியில் இருந்து பஹல்காமிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










காயமடைந்த மற்ற ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு காஷ்மீரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண