இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகன (Reusable Launch Vehicle) தரையிறங்கும் சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள சோதனை தளத்தில் இருந்து சோதனை நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஒ.-வுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இணைந்து பல்வேறு ராணுவ தளவாட தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவியல் மாநாட்டில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இவ்வாறு வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்துகிறது.
இந்நிலையில் இதேபோன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியது. ஆர்.எல்.வி டிடி ராக்கெட் 2016-ல் சோதனை முறையில் ஏவப்பட்டது. இந்திய விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளாக தீவிர முயற்சிக்கு பின் உருவாக்கப்பட்ட விண்கலம் விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானப் படையின் சின்னோக் வகை ஹெலிகாப்டர் காலை 7.10 மணிக்கு இந்த ஆர்.எல்.வி. வகை ஏவுகணை பொருத்தப்பட்ட நிலையில், தரையில் 4 புள்ளி 5 கிலோ மீட்டர் உயர்த்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலை நிறுத்தப்பட்டது.
இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான மறுபயன்பாட்டுக்குரிய முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் 2016ல் ஏவப்பட்டபோது அது இதுபோன்று ரன்வே லேண்டிங் செய்யும்படி வடிவமைக்கப்படவில்லை. அதனால் அப்போது அந்த வாகனம் கடலில்தான் தரையிறங்கியது. அதனை RLV TD HEX 01 (Hypersonic Flight Experiment 01) தொழில்நுட்பத்தில் செயல்பட்டது. இபோது RLV LEX மிஷன் அரங்கேறவுள்ளது. இது வெற்றிகரமான நடந்து முடிந்தால் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இதுவும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து ஆர்.எல்.வி. ஏவுகணை கணினி செயல்பாடு மூலம் முன்னரே திட்டமிடப்பட்ட அளவை எட்டியதை அடுத்து 4 புள்ளி 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டது. உலக அளவிலேயே எந்த நாடும் இந்த சோதனையில் வெற்றி காணாத நிலையில், முதல் முறையாக இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் வாசிக்க.
உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?