இன்று காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 மூன்று செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.
அந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட் இன்று காலை 09.18 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட இந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. அந்த ராக்கெட் 15 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இ.ஓ.எஸ்-07', சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் ‘ஜானஸ்-1’, ஆகிய 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில், இஒஎஸ்-07 ( EOS-07) முதன்மை செயற்கைக் கோளாக உள்ளது. இந்த இஓஎஸ் – 07 செயற்கைக்கோள் புவிநோக்கு பயன்பாட்டிற்கு உதவும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் 156.3 கிலோ எடையுள்ளது. அதேபோல் ஜானஸ்-1, ஸ்மார்ட் செயற்கைக்கோள் பணியை உள்ளடக்கியது ஆகும். ஜானஸ் – 1 செயற்கைக்கோள் மென்பொருள் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
இதில் 'ஆஸாதிசாட்-2' எனும் 8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த 750 கிராம்ப்புற மாணவிகள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ஆசாதிசாட் 2 செயற்கைக்கோள் வெப்பநிலையை ஆராய பயன்படும். மேலும் இந்த செயற்கைக்கோள் என்.சி.சி பாடலை இசைத்த படி அனுப்பபடும் என செயற்கைகோளை உருவாக்கிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.சி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் செயற்கைக்கோளில் என்சிசி பாடல் இசைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்:
இஸ்ரோ சார்பாக இதுவரை அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. தற்போது, வளரும் நாடுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 500 கிலோவிற்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்வி டி1 ரக ராக்கெட்டை வடிவமைத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் அதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் போது சென்சார் செயலிழப்பின் காரணமாக செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது.