இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாகோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை நெகிழ வைத்துள்ளது.


ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படங்கள்:


தற்போது, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத் மஹால், சராயு நதி ஆகியவை தெரிகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


ராமர் கோயிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளின் பிரபலங்களும், பல மாநில முதலமைச்சர்களும், பல மாநில ஆளுநர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






களைகட்டும் அயோத்தி:


ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக கடந்த 16ம் தேதியே பூஜைகள் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் பல இடங்களில் அன்னதானமும், பிரசாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.






கோயில் திறப்பு விழாவிற்காக புத்தாண்டு பிறந்தது முதலே அயோத்தி மாநகரம் முழுவதும் ஜொலித்து வருகிறது. வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் ஜொலிக்கும் அயோத்தியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?