நீடா முகேஷ் அம்பானி பண்பாட்டு மையம் என அழைக்கப்படும் இது, இந்தியாவின் முதல் பல்துறை பண்பாட்டு மையமாக அறியப்படுகிறது. இந்த கட்டடம் மும்பை, ஜியோ வோர்ல்ட் செண்டரில் அமைந்துள்ள வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நீடா முகேஷ் அம்பானி பல்துறை பண்பாட்டு மையத்தை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனர் ஈஷா அம்பானி, திறந்து வைக்க உள்ளார்.
நீட்டா முகேஷ் அம்பானி பல்துறை பண்பாட்டு மையத்தில், க்யூப், தி கிராண்ட் தியேட்டர், ஸ்டூடியோ தியேட்டர், என 3 பெரிய அளவிலான முக்கிய அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பல்துறை பண்பாட்டு மையம் 2023 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் மிகவும் பிரம்மாண்டமான மாநாட்டு மையம், சில்லறை வணிக மையங்களைக் கொண்ட பல்துறை பண்பாட்டு மையக் கட்டிடம் பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நீடா முகேஷ் அம்பானி பல்துறை பண்பாட்டு மையம், பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய பல்வேறு தளங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பல்துறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா குறித்து பேசியுள்ள ஈஷா அம்பானி, நீடா முகேஷ் அம்பானி பண்பாட்டு மையமானது, தனது தாயின் நீண்ட நாள் ஆசை, கனவு என கூறியுள்ளார். தனது அம்மாவான நீடா முகேஷ் அம்பானி கலை, கலாச்சார ரீதியாகவும், இந்தியா மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவும் தனி அடையாளத்தை உருவாக்க விரும்பினார் என தெரிவித்திருக்கிறார். அதன் பிரதிபலிப்பு தான் இந்த
பல்துறை பண்பாட்டு மையம் என இஷா அம்பானி கூறியுள்ளார்.
படைப்பாளிகளுக்காகவும், கலைஞர்களுக்காகவும், பார்வையாளர்களுக்காகவும் ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும் என தனது தாய் ஆசைப்பட்டதாகவும் அதன்படியே இந்த கலை மையம் உருவாக்கப்பட்டிருப்பதாக ஈஷா அம்பானி கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் சிறப்புகளை உலகிற்கு அறிய செய்யவும், உலகின் தலைசிறந்த கலைகளை இந்தியாவிற்குள் கொண்டுவர முடியும் என அவர் கூறியுள்ளார்.
அதன்படி இந்த நீடா முகேஷ் அம்பானி பல்துறை பண்பாட்டு மையம் 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஈஷா அம்பானி. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி திறக்கப்படும் நீதா முகேஷ் அம்பானி பல்துறை பண்பாட்டு மையத்தின் தொடக்க விழா மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.
மார்ச் 31, 2023 இந்தியாவின் தனித்துவ அடையாளம்
ஏப்ரல் 1, 2023 இந்தியா கலை கலாச்சாரம்
ஏப்ரல் 2, 2023 சங்கம் சங்கமம்
போன்ற நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023:
இந்தியாவின் தனித்துவ அடையாளங்கள் :
சுமார் 2,000 இருக்கைகள் கொண்ட கிராண்ட் தியேட்டரில், புகழ்பெற்ற இந்திய நாடக ஆசிரியரும் இயக்குனருமான ஃபெரோஸ் அப்பாஸ் கானின், நாட்டிய நாடகம் மேடையேற்றப்படுகிறது. பழங்கால சமஸ்கிருதக் கதைகளில் உள்ள , பாரம்பரிய நாட்டிய சாஸ்திரத்தின் கோட்பாடுகளை உள்ளடக்கியவாறு, இந்திய கலாச்சாரத்தின் உணர்ச்சிகரமான நாட்டிய நாடகம் காண்பிக்கப்பட இருக்கிறது. மேலும் 700 கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அதேபோல் பாரம்பரிய நடனம், இசை மற்றும் பொம்மலாட்டம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன
சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023
இந்தியாவின் ஃபேஷன் கலாச்சாரம்:
இந்திய கலாச்சார ஆடை வடிவமைப்புகள், மற்றும் நவீனத்துவ ஆடைகள், குறித்த சிறப்பு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. உலகளாவிய ஜவுளி துறையில் , இந்திய நாகரீக ஆடை வளர்ச்சியின் தாக்கம் போன்றவை காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.இந்தியாவின் விரிவான வரலாற்றையும், உலகளவில் ஃபேஷன் மீதான அதன் தாக்கத்தையும் முதன்முறையாக இந்த நிகழ்வு ஆவணப்படுத்துகிறது.
சங்கம் சங்கமம்:
பல்வேறு கலை கலாச்சாரங்களைக் கொண்டாடும் கலை நிகழ்வுகள் இந்த நாளில் நடைபெற உள்ளது. ஒரு குழு கலை நிகழ்ச்சியாக சங்கம் சங்கமம் நடைபெற இருக்கிறது .16,000 சதுர அடி ஆர்ட் ஹவுஸில் , 11 இந்திய கலைக்குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன . வளர்ந்து வரும் இந்திய சமகால கலைஞர்கள் மற்றும் இந்திய கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் மேடையேற்றப்படுகின்றன . இது இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.