உலகம் முழுவதும் புலிகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக ஜூன் 29-ம் தேதி சர்வதேச உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவானது எடுக்கப்பட்டு வருடாவருடம் அனுசரிக்கப்படுகிறது. இம்மாநாட்டில் மொத்தம் பதிமூன்று நாடுகள் கலந்துகொண்டன. உலக புலிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% புலிகள் இந்தியாவில் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.வனத்தின் காவலன் என்று புலிகளை கூறுகிறார்கள். புலிகளை பாதுகாப்பதன் மூலமாகவோ வனத்தையும் பாதுகாக்க முடியும் என விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.புலிகளை பொறுத்தவரை பசித்தால் மட்டுமே அது உணவு உண்ணும் என்கிறார்கள் விலங்கு ஆர்வலர்கள். ஒரு வனத்தில் புலி வாழ்கிறது என்றால் அந்த காட்டில் அதற்கு தேவையான நீர், சுற்றித்திரிய பரந்து விரிந்த பசுமை வாய்ந்த புல்வெளிகளில் இருக்கும் என்று நாம் புரிந்து கொள்லாம்.


வனக்காவலன் வகைகளும் காப்பங்களும்:



 


காடுகளின் பாதுகாப்பில் புலிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு புலி வகைகள் இருந்ததாகவும் ஆனால், அவை தற்போது அழிந்து விட்டதாக வனத்துறை சார்பில் கூறப்படுகிறது .குறிப்பாக பாலி , ஹாஸ்பின், ஜவான் இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, ராயல் பெங்கால் வகை மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.


இந்தியாவில் 2000-ஆம் ஆண்டில்தான் புலிகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது அதில் ’புராஜக்ட் டைகர்’ முக்கியம் வாய்ந்தது . இதனை தொடர்ந்து, தற்போது புலிகளின் எண்ணிக்கை நன்றாகவே உயர்ந்துள்ளது என்கிறது தரவுகள். இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் சரணாலயங்கள் இருக்கிறது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சாரணாலயங்கள் இருக்கிறது. கடந்த ஆண்டு தகவலின்படி தமிழ்நாட்டில் மட்டும் 264 புலிகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.இந்தியாவில் அதிகப்படியாக மத்திய பிரதேச மாநிலத்தில் 526 புலிகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது


பிரதமர் மோடியின் புலிகள் பற்றிய உரை :


 



 ஜூலை 28ம் தேதி நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை கூட்டத்தில் விடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார் இதில் அவர் கூறியது “7 புலி வகைகளை பாதுகாப்பதற்காக இந்தியா ஏப்ரல் மாதம் 9ம் தேதி இன்டர்நேஷனல் பிக் கேட் எனும் அமைப்பை தொடங்கியுள்ளது. நாம் புராஜெக்ட் டைகரில் இருந்து கற்றுக்கொண்டதை அடிப்படையாக கொண்டு இனி செயல் பட வேண்டும் மேலும், உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கைகளில் 70% புலிகள் இந்தியாவில் இருக்கின்றது. அதைதொடர்ந்து, ப்ராஜெக்ட் லயன் மற்றும் ப்ராஜெக்ட் டால்பின் என்னும் புதிய திட்டத்தை நாம் உருவாக்கி வருகிறோம்” என்றார்