சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.


கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்:


இந்த நிலையில், கனடா நாட்டில் இந்திய மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முசாமில் அகமதி. இவருக்கு வயது 25. இவர் தனது மேற்படிப்புக்காக கடந்த 2022ஆம் ஆண்டில் கனடாவுக்கு வந்துள்ளார்.


கனடாவில் ஒன்டாரியோவில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.  இந்த நிலையில், மாணவர் ஷேக் முசாமில் அகமதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் அம்ஜத் உல்லா கான் என்பவர் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் முஸம்மில் அகமது (25), கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் ஐடி முதுகலைப் படித்து வந்தார். இவர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.


மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்:


இந்த நிலையில், இன்று மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் முழு குடும்பமும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு கனடா அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.






உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில், "கனடாவில் படித்து வந்த 24 வயதுடைய மாணவர் ஷேக் முசாமில் அகமது மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வந்தது. எனவே, எங்களது மகனின் உடலை சொந்த ஊரான ஹைதரபாத்துக்கு கொண்டு வர உதவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


Priyanka Gandhi Hospitalized: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி! என்னாச்சு?