தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.


கடந்த 8ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த தினத்தை கொண்டாடும் வகையில் வடக்கு ரயில்வே சார்பில் ஒரு புதிய வகையான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ரயில் பயணங்களின் போது குழந்தைகளுடன் படுக்க ஏதுவாக புதிய வகையில் படுக்கை வசதி ஒன்றை ரயில்வே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தப் புதிய வசதி சோதனை முறையில் வடக்கு ரயில்வே சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



வடக்கு ரயில்வேயில், அன்னையர் தினத்தை ஒட்டி, 'லக்னோ மெயில்' ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில், புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அந்த படுக்கை வசதி மடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதி தொடர்பாக லக்னோ ரயில்வேதுறை சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது.  தாயுடன் குழந்தையும் படுத்து துாங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.


 






இதற்கு, ரயில் பயணியர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இந்தப் புதிய வசதி தொடர்பாக தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண