இனி ரயில்களில் சத்தமாக பேசியோ, பாட்டு பாடியோ சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


நாடு முழுவதும் ரயில்களில் தினசரி சுமார் 1 லட்சம் பயணிகள் வரை பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணிக்கும் பலர் கூட்டமாகவும், கும்பலாகவும் பயணிப்பது வழக்கம். நீண்டதூரம் பயணிக்கும்போது சலிப்பு அடையாமல் இருப்பதற்கும், நேரம் செல்வது தெரியாமல் இருப்பதற்காகவும் நண்பர்களுடன் ரயில்களில் அரட்டை அடித்துக்கொண்டு செல்வது பலருக்கும் வாடிக்கையாக உள்ளது.


இவ்வாறு ரயில்களில் கும்பலாக சூழ்ந்துகொண்டு அரட்டை அடிப்பதும், கூட்டமாக சேர்ந்துகொண்டு பாட்டு படிப்பதும் பல மாநிலங்ளில் ரயில்களில் நடைபெற்று வருகிறது. இதனால், ரயில்களில் பயணிக்கும் சக பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பல முறை பலரும் ரயில்வே உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.




இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது. ரயில் பயணத்தின்போது சத்தமாகவோ பேசுபவர்கள் மீதும், பாட்டு பாடிக்கொண்டும், சத்தமாக இசையை ஒலிக்கவிட்டு செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, இனி சக பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக மொபைல் போனில் சத்தமாக பேசிக்கொண்டே, இசையை ஒலிக்கவிட்டோ செல்லும் பயணிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


இரவு நேரங்களில் இரவு விளக்குகள் தவிர பயணிகள் பிற விளக்குகளை ஒளிரவிடக்கூடாது. மேற்கண்ட இரவு நேரங்களில் கூட்டமாக பயணிக்கும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது. சக பயணிகள் குற்றம்சாட்டினால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




அதேபோல, டிக்கெட் பரிசோதகர், ரயில்வே போலீசார், எலக்ட்ரீசியன், சமயைல் பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்களும் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்படக்கூடாது. ரயிலில் பயணிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் தேவையான உதவிகளை ரயில்வே பணியாளர்கள் செய்துதர வேண்டும். ரயில்வே பணியாளர்களும், டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகள் ஹெட்செட் அணிந்து பாடல்கள், படங்கள் பார்க்க அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே துறை உள்ளது. நாட்டின் பெரிய நகரங்களுக்குள்ளே மின்சார ரயில் சேவைகளும், நாட்டின் மிகப்பெரிய நகரங்களுக்கு இடையேயும், மாநிலம் விட்டு மாநிலமும் தினசரி ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண