ரயில் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டுபிடிக்க குழு; வழக்கு பாயும் - இந்திய ரயில்வே அதிரடி
ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், காழ்ப்புணர்ச்சி போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் கண்ணாடி உடைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க ஏதுவாக ரயில்வே பாதுகாப்புப் படை சிறப்புக் குழு ஒன்றையும் அமைத்துள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ரயில்வே சொத்துக்கள் தேசிய சொத்து என்பதால் இதனை சேதப்படுத்துதல் சட்டத்திற்கு புறம்பான செயலாகும் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சில திங்களுக்கு முன்பு கும்பமேளாவுக்கு, பக்தர்கள் சென்ற ரயிலில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், சிலர் அனுமதிப்படாத பெட்டிகளிலும் ஏறினர். சிலர் , ரயில் கண்ணாடிகளை உடைக்கும் செயலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது தொடர்பாக இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, கடந்த 10-ம் தேதி புதுதில்லியில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில், ஸ்வதந்திரா செனானி விரைவு ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள 73 கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய செயல்கள் ரயில் பயணிகளிடம் அதிர்ச்சியையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் இல்லாத சூழலை தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள சிலர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
காழ்ப்புணர்ச்சியின் பேரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மத்திய கிழக்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க ஏதுவாக ரயில்வே பாதுகாப்புப் படை சிறப்புக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
ரயில்வே சொத்துக்கள் தேசிய சொத்து என்பதால் இதனை சேதப்படுத்துதல் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே எச்சரித்துள்ளது.