ரயில் என்பது சாமானிய மக்களின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த காரணத்திற்காகவும் ரயில்வே எந்த ரயிலின் நேரத்தையும் ரத்து செய்தாலோ, நேரத்தை மாற்றினால், பயணிகள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இது ஒரு சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. பொதுவாக, மோசமான வானிலை, போக்குவரத்து தடை அல்லது தண்டவாள பராமரிப்பு போன்ற காரணங்களால் மட்டுமே ரயில்களை ரயில்வே ரத்து செய்கிறது. 


ரயில்கள் ரத்து:


இன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 10, 2023, பல்வேறு மண்டலங்களின் ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. அதன்படி, நீங்களும் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ரயில்களின் பட்டியலைப் பாருங்கள். 


நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்12690) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.


அதன்படி, சென்னையில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக இந்த ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில் நேற்று முன்தினம் (8ம் தேதி) சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயிலும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நீலகிரி ரயில் ரத்து: 






தென்னக ரயில்வே சமூக வலைதளமான X இல் பகிர்ந்துள்ள தகவலின்படி, ”நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், சில ரயில்களை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில், ரயில் எண் 06136 மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் பயணிகள் ரயில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் எண் 06137 உதகமண்டலம்-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை டிசம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு முழுத் தொகையையும் ரயில்வே திருப்பி அளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வடக்கு ரயில்வே: 


பாரபங்கி மற்றும் அயோத்தி கான்ட் இடையே ஷாகஞ்ச் ரயில் நிலையத்தில் போக்குவரத்து தடை காரணமாக, லக்னோ கோட்டத்தின் பல ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், டிசம்பர் 10ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை பல ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


1. ரயில் எண். 15025 ஆனந்த் விஹார் டெர்மினல்-மாவ் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 10 க்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. ரயில் எண். 15083 சப்ரா-பருக்காபாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 16 வரை ரத்து செய்யப்படுகிறது.
3. ரயில் எண் 15084 ஃபரூக்காபாத்-சாப்ரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. ரயில் எண். 15084 ஃபரூக்காபாத்-சாப்ரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. ரயில் எண். 14213/14214 வாரணாசி-கோண்டா இன்டர்சிட்டி டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
6. ரயில் எண் 05171/05172 பல்லியா-ஷாகஞ்ச்-பல்லியா முன்பதிவு செய்யப்படாதது டிசம்பர் 16 மற்றும் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
7. ரயில் எண். 05167/05168 பல்லியா-ஷாகஞ்ச்-பல்லியா முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் டிசம்பர் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.