தமிழ்நாடு:
- நீட் விலக்கு நம் இலக்கு' கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 நாள்களில் 72 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் உணர்வை கையெழுத்தாக பதிவு செய்துள்ளனர்.
- புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் சிறு, குறு தொழில்துறையினர் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- சென்னையில் மழைநீர் வடிகால் பணியை 10% கூட திமுக அரசு முடிக்கவில்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
- மிக்ஜாம் புயலால் சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மழையால் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயர்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மழை வெள்ள பாதிப்புக்கு காரணம்- இபிஎஸ் குற்றச்சாட்டு
- கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் வரும் செவ்வாய்கிழமை ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
- அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது, ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.
இந்தியா:
- வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணை அவரது உறவினரே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அமைச்சர் பெயரில் வெளியான போலி பதிலால் சர்ச்சை வெடித்துள்ளது.
- இடைக்கால சபாநாயகரான ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- 'எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அகிலேஷ் யாதவ் வழங்கியுள்ளார்.
- இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு சுயசார்பு மிக முக்கியம் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உலகம்:
- இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த, ஐ.நா சபையில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடு நிராகரித்துள்ளது.
- ரஷிய மொழியில் புதின் பேசியிருப்பது செயற்கை நுண்ணறிவு மூலம் மொழி பெயர்க்கப்பட்டு, அவர் இந்தியில் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
- வங்கதேச தீயணைப்பு படையில் முதன் முறையாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இத்தாலி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு.
- இஸ்ரேல் -ஹமாஸ் போர்: காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
- விஜய் ஹசாரே கோப்பை: கேரளா, பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.
- 3 போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை 2-0 என இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.
- ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஈஸ்ட் பெங்கால்-பஞ்சாப் எப்.சி ஆட்டம் டிராவில் முடிந்தது.