பிரதமர் மோடி, இன்று (வெள்ளிக்கிழமை) கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், இந்திய கடற்படைக்கான புதிய கடற்படைக் கொடியை வெளியிட்டார்.
புதிய கடற்படைக் கொடியை வெளியிட்டிருப்பதன் முக்கியத்துவம் மற்றும் செயின்ட் ஜார்ஜ் சிலுவை பொறிக்கப்பட்ட பழைய கொடி எதைக் குறிப்பிடுகிறது என்பது குறித்து கீழே காண்போம்.
கடந்த கால காலனித்துவத்தை நினைவுப்படுத்தும் கொடி மாற்றம்
செயின்ட் ஜார்ஜ் சிலுவை பொறிக்கப்பட்ட தற்போதைய கொடிக்கு பதிலாக, மண்டலத்தில் மூவர்ணக் கொடி தாங்கிய (கொடியின் மேல் இடது மூலையில்) கொடி மாற்றப்பட்டுள்ளது.
இந்த சின்னம் அடிப்படையில் இந்திய கடற்படையின் சுதந்திரத்திற்கு முந்தைய கொடிக்கு மாற்றாக புதிய கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய கொடியில் வெள்ளை பின்னணியில் சிவப்பு ஜார்ஜ் கிராஸ் மற்றும் மேல் இடது மூலையில் யுனைடெட் கிங்டமின் யூனியன் ஜாக் கொடி பொறுக்கப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி, 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகும், இந்தியப் பாதுகாப்புப் படைகள் பிரிட்டிஷ் காலனித்துவக் கொடிகள் மற்றும் பேட்ஜ்களுடனே தொடர்ந்தன. ஜனவரி 26, 1950 அன்றுதான் இந்தியமயமாக்கப்பட்ட முறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
கடற்படை முகடு மற்றும் கொடி ஆகியவை மாற்றப்பட்டன. ஆனால் கொடியில் மேற்கொள்ளப்பட்ட ஒரே வித்தியாசம் என்னவென்றால், யூனியன் ஜாக் சின்னம் மூவர்ணத்துடன் மாற்றப்பட்டது. மேலும் ஜார்ஜ் சிலுவை தக்கவைக்கப்பட்டது.
மாற்றத்தை சந்தித்து வந்துள்ள இந்திய கடற்படை கொடி
2001 ஆம் ஆண்டில் கடற்படைக் கொடியில் மாற்றம் செய்யப்பட்டது. ஜார்ஜ் சிலுவை, வெள்ளைக் கொடியின் நடுவில் கடற்படை முகடு மூலம் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் மூவர்ணக் கொடி, இடது மூலையில் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டது.
மேற்கு கடற்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் பார்போசா, கடற்படைக் கொடியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக முன்வைத்தார். இதையடுத்து, நீண்ட காலமாக இந்த கோரிக்கை நிலுவையில் இருந்தது.
இருப்பினும், 2004 ஆம் ஆண்டில், கடற்படை முகட்டின் நீலம் வானத்துடனும் கடலுடனும் ஒன்றிணைந்ததால் புதிய கொடியை வேறுபடுத்த முடியாது என்று புகார்கள் எழுந்தது. கொடி மீண்டும் ரெட் ஜார்ஜ் சிலுவைக்கு மாற்றப்பட்டது. கொடியில் மாற்றம் செய்யப்பட்டு, சிவப்பு ஜார்ஜ் சிலுவையின் நடுவில் அசோகா பில்லர் சின்னம் பொறிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், தேவநாகிரி எழுத்துருவில் அசோக சின்னத்தின் கீழ் கொடியில் ‘சத்யமேவ் ஜெயதே’ என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு மற்றொரு மாற்றம் செய்யப்பட்டது.