பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தூதரகம் தெரிவிக்கையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு, துருக்கியில் காணாமல் போன இந்தியர் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


"பிப்ரவரி 6 பூகம்பத்திற்குப் பிறகு துருக்கியில் காணாமல் போன இந்தியரின் உடல் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று  இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.






நிலநடுக்கம்


துருக்கி- சிரியா எல்லையில் 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டடங்கள் சரிந்து நொருங்கின. அதை தொடர்ந்து சில மணி நேரங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ தாண்டியது. கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். ஐந்து நாள்களுக்கு பிறகும் சிலர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகிறது. அதேநேரம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்தியர் உயிரிழப்பு


துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் தெரிவிக்கையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு, துருக்கியில் காணாமல் போன இந்தியர் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


"பிப்ரவரி 6 பூகம்பத்திற்குப் பிறகு துருக்கியில் காணாமல் போன இந்தியரின் உடல் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று  இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அவர் பெயர் விஜயகுமார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இச்செய்தி இந்தியர்களிடையே பெரும் சோகத்தை தெரிவித்துள்ளது.