உலக பணக்காரர்கள் வரிசையில் அடிக்கடி சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தற்போது உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. இம்முறை உலகளவில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர் தொழிலதிபர் அதானி இடம்பிடித்துள்ளார். 


உலக பணக்காரர்கள் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருந்த வாரன் பஃப்ஃபட்டை அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கௌதம் அதானியின் மொத்த சொத்த மதிப்பு 123 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது வாரென் பஃப்ஃபட்டின் சொத்து மதிப்பான 121.7 பில்லியன் டாலர்களைவிட அதிகமாகியுள்ளது. இதன்காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 5-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று கருதப்படுகிறது. 


ப்ளூம்பெர்க் மில்லியனர்கள் அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் தற்போது வரை அதானி 43 பில்லியன் டாலர் சொத்தை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அவருடைய சொத்து மதிப்பில் சுமார் 56% உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 




இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானிக்கு முன்பாக தற்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்(130 பில்லியன் டாலர்), பெர்னார்டு அர்னால்ட்(167 பில்லியன் டாலர்), ஜெஃப் பேசோஸ்(170.2 பில்லியன் டாலர்), எலோன் மஸ்க் (269.7 பில்லியன் டாலர்). 


இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். அதானி குழமத்திற்கு  அதானி எண்டர்பிரைஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் உள்ளிட்ட 6 மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளன. அதானி குழுமம் கப்பல் துறைமுக தொழில் தொடங்கி பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறது. 


கடந்த 8ஆம் தேதி அதானி குழுமத்தின் சில நிறுவனங்களுக்கு அபுதாபியை சேர்ந்த நிறுவனம் ஐஹெச்சி 2 பில்லியன் டாலர் முதலீட்டை செய்திருந்தது. இந்தச் சூழலில் அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் சொத்துகள் வேகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய 2050-ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும்போது இந்தியாவில் பசியின்மை என்ற பிரச்னையே இருக்காது என்று சமீபத்தில் தொழிலதிபர் அதானி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண