இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் பெண் அக்னிவீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி இன்று அறிவித்துள்ளார்.


சண்டிகரில் நடைபெற்ற இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தின் போது பேசிய அவர், "உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.


 






புதிய ஆயுத அமைப்பு கிளையை உருவாக்குவது குறித்து பேசிய அவர், "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்திய விமானப்படையில் அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புக் கிளையை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பது எனது பாக்கியம். சுதந்திரத்திற்குப் பிறகு புதிய ஆயுத செயல்பாட்டுக் கிளை உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை.


இதன் மூலம், சமீபத்தில் வெளியான அனைத்து வகையான ஆயுத அமைப்புகளும் கையாளப்படும். இதனால், 3,400 கோடி ரூபாய் சேமிக்கப்படும். அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப் படையில் விமானப் போர்வீரர்களை உள்வாங்குவது ஒரு சவாலாக இருந்தாலும், அதைவிட முக்கியமாக, இந்தியாவின் திறனைப் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.


அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப் படையில் விமானப் போர்வீரர்களை உள்வாங்குவது ஒரு சவாலாக இருந்தாலும், அதைவிட முக்கியமாக, இந்தியாவின் திறனைப் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.


கடந்த ஒரு வருடமாக இந்திய விமானப் படை தனது பங்கிற்கு சவால்களை எதிர்கொண்டது. எல்லைகளில் தொடர்ந்து நிலைநிறுத்துவதாக இருக்கட்டும் அல்லது மோதல் பகுதிகளில் இருந்து இந்தியர்களை மீட்பதாயினும், அனைத்தையும் நேரடியாக எதிர்கொண்டது.


 






பாரம்பரியமாக நிலம், கடல் மற்றும் வான் வழியாக போர் நடத்தப்பட்டது. அது தற்போது விண்வெளி மற்றும் இணையத்திற்கு விரிவடைந்து ஒரு கலப்பினப் போராக மாறியுள்ளது. எனவே, வழக்கமான அமைப்பு மற்றும் ஆயுதங்கள் நவீன, தகவமைப்பு தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட வேண்டும். எதிர்கால மோதல்களை நேற்றைய மனநிலையுடன் எதிர்த்துப் போராட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.


இந்திய விமானப்படை தினமான இன்று இந்திய விமானப்படை போர்வீரர்களுக்கு புதிய போர் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.