தற்சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அதிநவீன கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் ( INS Vikrant). இதுதான் முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் என்ற பெருமைக்குரியது. இந்நிலையில், தற்போது ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலுக்கு புதிதாக 26 போர் விமானங்களை இந்தியா வாங்க இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 


கோவாவில் French Rafale-Marine-இன் கடல்கரையில் பறப்பது உள்ளிட்ட பரிசோதனை முடிந்துள்ளது. US F-18 super hornet தயாரிப்பு பணி வரும் ஜூன், 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூறிப்பட்டுள்ளது. French Rafale-Marine மேம்படுத்துதல், பிரான்ஸ்- ரபேல் ஒப்பந்தத்தின் படி,  26 போர் விமானங்களில், 8 இரண்டு பேர் அமர்ந்து பறக்கும் போர் விமானங்கள் வேண்டும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.  இவை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது. 


ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலுடம் இயக்கப்படும் போர் விமானங்கள், கோவா நகரில் பரிசோதனை மேற்கோள்ளப்பட்ட பின்னரே முழுவதுமாக பணியை தொடங்கும். ஐ.என்.எஸ். விக்கிரமாத்தியா (NS Vikramaditya) கவார் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கப்பல், ஜூன் மாதத்திற்கு மேல் தன் பயணத்தை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  India’s indigenous aircraft carrier INS Vikrant - ஐ.என்.எஸ். விக்ராந்த் கடலில் பரிசோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் முழு பரிசோதனைகள் முடிந்து சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்,15) பிரதமர் நரேந்திர மோடியால் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 


தற்போது, இதற்கு புதிதாக 26 போர் விமானங்கள் வாங்க உள்ளனர். 


இந்திய கடற்படையில் South Block அதிகாரிகள் கூறுகையில், இந்தியா போர் விமானங்கள் குத்தகைக்கு எடுக்க விரும்பவில்லை. ஆகையால், G-to-G purchase - Government to Government ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதாவது, தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் (ஹெ.ஏ.எல்.) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டெக் வகையிலான போர் விமானங்களை வாங்க இருக்கிறார்கள். 


French Dassault அல்லது யு.எஸ். போயிங் ரக போர் விமானங்களை இந்தய கடற்படை வாங்க இருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் GE-404 என்ஜின் மற்றும் தேஜஸ் GE-414 ஆகிய இரண்டு ரக போர் விமானங்களை பரிசோதித்து வருகிறது. 


ஐ.என்.எஸ்.விக்ராந்த்: 


 கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961ல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசிடம் இருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது. பின் 1997ல் படையில் இருந்து விலக்கப்பட்டு 2017ல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் 2013ல் வாங்கப்பட்டது. நம் கடற்படையில் உள்ள ஒரே விமானம் தாங்கி போர் கப்பலாக இது உள்ளது. இந்நிலையில் நம் கடற்படை முதல் முறையாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை உருவாக்கி உள்ளது.