இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,819 ஆக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் 11,793 ஆகவும், நேற்று 14,506 ஆகவும் பதிவாகிய கொரோனா பாதிப்பு இன்று 18,819 பேராக அதிகரித்து 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,34,33,345 லிருந்து 4,34,52,164 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,827 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா தொற்றால் 39 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், நாடுமுழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99,602 லிருந்து 1,04,555 ஆக அதிகரித்துள்ளது.
மாநில செயலர்களுக்கு கடிதம்
முன்னதாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், மக்கள அதிகம் கூடும் திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்