News Today Live: மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலி, மைசூரு பூங்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாடன் அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் 90ஆவது பிறந்ததினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாமின் பிறந்தநாள் உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement
17:47 PM (IST)  •  15 Oct 2021

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி, சிகிச்சைக்கு பிறகு, மைசூரு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட டி-23 புலி, சிகிச்சைக்கு பிறகு, மைசூரு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது

17:39 PM (IST)  •  15 Oct 2021

ஆணவக்கொலைகள் தடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் - தொல். திருமாவளவன் எம்.பி..

ஆணவக்கொலைகள் தடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று வெற்றிகள் பெற்றதால், விஜயும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கமுடியாது - தொல். திருமாவளவன் எம்.பி..

17:37 PM (IST)  •  15 Oct 2021

பிடிபட்டது டி 23 புலி

நீலகிரி, மாயாறு வனப்பகுதியில் பிடிப்பட்டது டி 23 புலி. நேற்று 10 மணிக்கு அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

13:57 PM (IST)  •  15 Oct 2021

பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா ஆகிய நான்கு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்றும், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.