தமிழ்நாடு 


* தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஆறாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. அசைவ பிரியர், மது குடிப்போருக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


* சேலம் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.


* நடிகர் விவேக் உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது காரணமில்லை என தடுப்பூசி பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தெரிவித்துள்ளது.


* தமிழ்நாட்டில் இன்று 1,29,573  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,152 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 147  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.


*  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ.103.92க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 104.22-க்கு விற்பனையாகிறது.  ஒரு லிட்டர் டீசல், ரூ.99.92க்கு விற்பனையான நிலையில் 33 காசுகள் அதிகரித்து ரூ. 100.25-க்கு விற்பனையாகிறது.


இந்தியா


 “257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 100 கோடி டோஸ் செலுத்தியது புதிய சாதனையின் தொடக்கமாகும்.  மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த சாதனை செய்ய காரணமானது” என பிரதமர் மோடி கூறினார்.


* டெல்லி விமான நிலையத்தில் நடிகை சுதாவின் செயற்கை காலை அகற்றச் சொல்லி விவகாரத்தில் பிரதமரிடம் நடிகை கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை மன்னிப்பு கோரியது.


உலகம்


* 100 கோடி டோஸ் தடுப்பூசியை சாதனையை இந்தியா எட்டியதற்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


* உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 49.52 லட்சத்தை கடந்துள்ளது.


பொழுதுபோக்கு


நடிகர் சூர்யா நடித்து, தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு வழக்கறிஞராக சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது.


* உதயநிதி ஸ்டாலினை தயாரிப்பாளர் போனி கபூர் நேரில் சந்தித்தார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு


* தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் முதல்முறையாக டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு நமீபியா தகுதி பெற்றது.


* கொரோனாவால் கடந்த செப்டம்பரில் ரத்தான இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 2022இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண