LVM3 Rocket: வரும் 26ம் தேதி 36 செயற்கைகோள்கள் உடன் விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்..

எல்விஎம் 3 ராக்கெட்யை வரும் 26ம் தேதி 36 செயற்கைகோள்கள் உடன் விண்ணில் செலுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

எல்விஎம் 3 ராக்கெட்யை வரும் 26ம் தேதி 36 செயற்கைகோள்கள் உடன் விண்ணில் செலுத்த, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

36 செயற்கைகோள்களுன் விண்ணில் பாயும் எல்.வி.எம்-3

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, எல்.வி.எம்-3 ராக்கெட்டை வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு உள்ளது. இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். 

பயணத்தின் இலக்கு என்ன?

இணைய சேவை நிறுவனமான oneWeb நிறுவனம் ஆனது SpaceX, Arianespace மற்றும் ISRO ஆகியவற்றின் ஏவுதல் சேவைகளைப் பயன்படுத்தி அதன் முதல் தலைமுறை விண்மீன் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துகிறது. இதுவர அந்நிறுவனத்திற்காக 17 முறை வெவ்வேறு நிறுவனங்களால் ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 18வது முறையாக ஒன்வெப் நிறுவனத்திற்காக வரும் 26ம் தேதி மேலும் ஒரு ராக்கெர் இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஒன்வெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகளாவிய கவரேஜை அடைவதில் இருந்து நாங்கள் ஒரு ஏவுதல் தொலைவில் இருக்கிறோம். ISRO/NSIL உடனான இந்த கடைசி ஏவுதல் விண்வெளியில் 600 செயற்கைக்கோள்களைக் குறிக்கும். இது வணிக ரீதியாக நேரலைக்குச் செல்லத் தேவையான எண்ணிக்கையாகும். நிறுவனத்தின் சேவைகள் ஏற்கனவே 50 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ள அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு ஐரோப்பா அகிய நாடுகளில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு இறுதிக்குள், உலகம் முழுவதும் சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.வி.எம்-3

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம்,  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், அதிக எடையை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இது இஸ்ரோ வடிவமைத்ததிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது. எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

ஒட்டுமொத்தமாக எல்.வி.எம்-3 ராக்கெட்டின் ஆறாவது பயணம் இதுவாகும். அதேநேரம், வணிகமுறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இரண்டாவது முறையாகும். இவ்வளவு குறுகிய கால இடைவெளிக்குள் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola