உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால், நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் கடந்த ஜூன் மாததில் 16 மாதங்களில் இல்லாதா அளவு 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை, உணவுப் பொருள்கள், கச்சா எண்ணெய்,  பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்  போன்றவற்றின் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மொத்தவிலை பணவீக்கம் உயா்வுக்கு காரணம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள India’s wholesale price index அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த மே மாதத்தில் WPI- அடிப்படையிலான பணவீக்கம் 2.61 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு காராணம் என தெரிவிக்கப்பட்டது. இது ஏப்ரம் மாதத்தில் 1.19 சதவீதமகா இருந்தது. இப்போது கடந்த மே மாதத்தை விட 0.39 அதிகரித்துள்ளது. மொத்த வணிகத்தில் பொருட்களின் விற்பனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அதன் விலை மாற்றத்தை WPI கணக்கிட்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். அதன்படி, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது,  ஜூன் 2024-ல் உணவுப் பொருட்களில் விலை 2.96 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மினரல்ஸ் 1.47 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


உணவுப் பொருட்கள் அல்லாதவைகள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிப்பொருள் ஆகியவற்றின் விலை மே மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பட்டியலிடப்பட்டுள்ள 22 பொருட்களில் 8 குழுக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் 10 பொருட்களின் விலை சரிந்துள்ளது. 4 விலை மாற்றமின்றி உள்ளது. 


உணவுப் பொருட்கள், இரசாயன பொருட்கள், ஆடை, பிளாஸ்டிக், மோட்டர் வாகனங்கள் ஆகிய பொருட்கள் கடந்த மாதத்தை விட விலை உயர்வை பதிவு செய்துள்ளது. 


மே,2024 உடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் கனிமங்கள், மெட்டல் அல்லாத மினரஸ் ப்ராட்க்ட், ஃபெபரிகேடட் மெட்டல் பொருட்கள், இயந்திரங்கள், பார்மாசூட்டிகல்ஸ் , மெடிக்கல் கெமிக்கல், பொட்டானிக்கல் ப்ராடக்ட்ஸ் உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.