குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் பல கிராமங்களில் நாட்டிலேயே முதன்முறையாக "பாலிகா பஞ்சாயத்து" எனப்படும் பெண்கள் பஞ்சாயத்து தொடங்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியை மேம்படுத்துவதையும், பெண்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்பதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. `பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ` பிரச்சாரத்தின் கீழ் குஜராத் அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறையின் தனித்துவமான முயற்சி இது. இது கட்ச் மாவட்டத்தின் குனாரியா, மஸ்கா, மொடகுவா மற்றும் வத்சர் கிராமங்களில் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் பெண் பஞ்சாயத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. "பாலிகா பஞ்சாயத்து" 11-21 வயதுக்குட்பட்டவர்களால் நிர்வகிக்கப்படுகிறது, இதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகளின் சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணை முறை போன்ற தீய பழக்கங்களை சமூகத்திலிருந்து அகற்றுவதாகும்.


கட்ச் பகுதியைச் சேர்ந்த பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர் கர்பா பார்தி கூறுகையில், "பாலிகா பஞ்சாயத்து என்பது 11 முதல் 21 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பஞ்சாயத்து ஆகும், இதன் முக்கிய நோக்கம் பெண்கள் தங்கள் பரிந்துரைகளை பஞ்சாயத்தின் முடிவில் செய்ய வேண்டும். இதன் மூலம் சிறுவயதில் இருந்தே அரசியலில் தனிநபரின் குறிப்பாக பெண் குழந்தைகளின் ஆர்வம் தொடங்குகிறது” என்றார்.




மேலும் அவர் கூறுகையில், "மகளிர் தினத்தன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் பேசினோம், இந்த முயற்சியை இந்தியா முழுவதும் எடுத்தால், எங்களைப் போன்ற மற்ற பெண்களும் சிறப்பாக செயல்பட முடியும். கடந்த ஓராண்டாக எங்களின் "பாலிகா பஞ்சாயத்து" நடந்து வருகிறது” என்றார்.


பாலிகா பஞ்சாயத்து சர்பாஞ்ச் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வயதான ஊர்மி அஹிர் கூறுகையில், "பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டத்தின் கீழ் கட்ச் நகரில் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் அரசியலில் முன்னேற வேண்டும் என்பதே பஞ்சாயத்தின் முக்கிய நோக்கமாகும். பாலிகா பஞ்சாயத்தில், கிராம பஞ்சாயத்து போலவே உறுப்பினர் நியமனம் செய்யப்படுகிறார்” என்றார்.


"வெளியே வர முடியாத கிராமத்து பெண்கள் கல்வி கற்க முடியாது. அதனால், அவர்களுக்கு உதவ பெண் பஞ்சாயத்து உருவாக்கப்பட்டுள்ளது. நான்தான் சர்பஞ்ச், அவர்கள் என்னிடம் வந்து கேள்விகளை எழுப்புகிறார்கள், அவர்களால் முடியவில்லை என்றால் நான் தீர்க்கிறேன். பிரச்னையைத் தீர்க்க கிராம பஞ்சாயத்து தீர்வு காணும்.உதாரணமாக, ஒரு பெண் பள்ளியை பாதியில் நிறுத்தினால், அவளது பெற்றோர் அவளை வெளியே விடவில்லை எனில், அவளது பெற்றோருக்கு விளக்கி, அந்த பெண்ணை மீண்டும் படிக்க அனுப்புகிறோம்," என்றார் ஊர்மி அஹிர்.