இந்தியா மீது குறி வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் அனுப்பிய நிலையில், அதையெல்லாம் செதில், செதிலாக சிதைத்துவிட்டிருக்கிறது இந்திய ராணுவமும், விமானப்படையும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியாவை சீண்டிவிட்ட பாகிஸ்தான், அதற்கான விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது.

Continues below advertisement

பாகிஸ்தானின் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று இந்திய அரசு பார்த்து, பார்த்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தன் மக்களை குறித்து கூட கவலைப்படாத பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடக்க தொடங்கியிருக்கிறது. எனவே, இந்திய படைகள் பாகிஸ்தானை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யத் தொடங்கியிருக்கின்றன.

பாகிஸ்தானின் தலைநகரான இசுலமபாத்திலேயே இந்திய படைகள் தாக்குதலை தொடங்கியிருப்பதை கண்டு பாகிஸ்தான் அரசு குலை நடுங்கிப்போய் உள்ளது. இந்தியா மீது ஏன் கையை வைத்தோம் என்று அவர்கள் வருத்தப்படும் அளவிற்கு இந்திய படைகள் தாக்குதலை இன்று நள்ளிரவு நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement