இந்தியாவின் முதல் நுண் ஏவுகணை தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பான ஜ்வாலா எம்.கே-1 ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு
சிறிய ரக விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து அவற்றை அழிக்கும் நோக்கில் ஜ்வாலா எம்.கே-1 எனும் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான தாக்குதல்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக நடைபெறும் நிலையில் வான் எல்லையை பாதுகாப்பது இன்றியமையாததாகிறது.
பாதுகாப்புத்துறையில் முன்னேற்றம்
இது குறித்து தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனமான ஐஜி டிஃபென்ஸ், ஜ்வாலா எம்.கே-1 அமைப்பில் நுண் ஏவுகணைத் தொழில்நுட்பமானது, கிரிட் (GRID) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு பணி மேலாண்மைத் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வான்வழி வாகனங்களை அடையாளம் காணுதல், தகவல்களை பெறுதல் மற்றும் தாக்குதல்களுக்கான உள்ளீடுகளை விரைவில் செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து செய்ய இயலும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இந்தியாவில் தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும் முதன்முதலாக தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்கும் நுண் தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்பு ஜ்வாலா எம்.கே-1 ஆகும். இச்சோதனை வெற்றிப் பெற்றதன் மூலம் சிறிய மற்றும் பெரிய ரக ஏவுகணைகளையும், ட்ரோன்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய வான் எல்லை பாதுகாக்கப் பட உள்ள நிலையில் இது பாதுகாப்புத்துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
