லைட்ஸ் ஆஃப்.. 1 மணி நேரம் இருளில் மூழ்கிய இந்தியா.. ஓ இதான் காரணமா!
ஈபிள் கோபுரம், பிக் பென், சிட்னி ஓபரா ஹவுஸ், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மற்றும் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள் உலகளாவிய நிகழ்வான புவி நேரத்தில் பங்கேற்றன. மின்சாரத்தை சேமிக்க விளக்குகள் அணைக்கப்பட்டன.

புவி நேரத்தை கடைபிடிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நேற்று இரவு ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்சாரத்தை சேமிக்க புவி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட்டன.
பூமி நேரம் என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள பல நினைவுச்சின்னங்கள், கட்டிடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு, புவி நேரம் கடைபிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்தியா கேட்டில் மின்சாரத்தை சேமிக்க விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதேபோல, டெல்லி குதுப் மினாரில் உள்ள விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஹைதராபாத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மாநில தலைமை செயலகத்தில் மின்சாரத்தை சேமிக்க விளக்குகள் அணைக்கப்பட்டன. கேரள சட்டப்பேரவையிலும் புவி நேரம் கடைபிடிக்கப்பட்டது.
முதன்முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சிட்னி நகரில்தான் 'புவி நேரம்' கடைபிடிக்கப்பட்டது. விளக்குகள் அணைக்கப்படும் இந்த நிகழ்வு, பின்னர், பிரபலமாக தொடங்கியது. லாப நோக்கற்ற அமைப்பான World Wide Fund-தான் இந்த நிகழ்வை முதலில் ஏற்பாடு செய்தது.
இருளில் மூழ்கிய இந்தியா:
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது, 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் புவி நேரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகள், இதை ஊக்குவித்து வருகின்றன. மக்களிடையே மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈபிள் கோபுரம், பிக் பென், சிட்னி ஓபரா ஹவுஸ், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மற்றும் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள் உலகளாவிய நிகழ்வான புவி நேரத்தில் பங்கேற்றன.
காலநிலை நெருக்கடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை தண்ணீர் பற்றாக்குறையை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், சேமிக்கும் தேவை முன்னெப்போதையும் விட அவசரமாக மாறியுள்ளது. புவி நேரம் என்பது மின்சாரத்தை சேமிப்பது மட்டும் அல்ல, நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க வழிவகை செய்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்