2020 - 2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் உத்தேச மதிப்பீடுகளை தேசிய புள்ளிவிவரம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


உண்மையான ஜிடிபி (Real GDP) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (2011 - 2012) நிலையான விலை மதிப்பிலான 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான உண்மையான ஜிடிபி  147.54 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 - 2022 ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020 - 2021 ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி -7 ஆக  சுருங்கியது (GDP Contraction)என்பது குறிப்பிடத்தக்கது  


தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி (Nominal GDP) 232.15 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபியின் வளர்ச்சி விகிதம்  17.6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 


 



2011 - 2012 நிலையான விலை மதிப்பிலான 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மதிப்பீட்டு


தனிநபர் வருமானம் (Per Capita net National Income ) (2011 - 2012 விலை மதிப்பில்) 2021 - 2022 ஆம் ஆண்டு ஆண்டின் போது 93,973 ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020- 21 இல் இது 86,659 ரூபாயாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது 8.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 



Caption


 


தற்போதைய விலைமதிப்பில் அடிப்படையில் தனிநபர் வருமானம் 2021 - 2022 காலத்தில் 1,72714 ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020 - 2021 காலத்தில் 1,48,504 ரூபாயுடன் ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் அதிகமாகும்.



பொருளாதார நடவடிக்கைகள்: 


 


 


2021-22 நிதியாண்டில் (2011-12 நிலையான விலை மதிப்பீட்டில்), சுரங்கம் மற்றும் குவாரி துறையில் 14% வளர்ச்சி காணப்படும்; தொழிற்சாலை துறையில் 12.4 சதவிகிதமும், கட்டுமானம் துறையில் 10.7  சதவிகிதமும் வளர்ச்சி காணப்படும். 


சுற்றுலா, வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தொடர்பு, மற்றும் ஒலிபரப்பு  போன்ற சேவைத் துறையின் வளர்ச்சி  11.9 சதவிகிதமாக அதிகரிக்கும். பொது மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மீட்சி  ஏற்படும். நிதி, வீட்டு மனை மற்றும் தொழில்முறை துறைகள் 4%  வளர்ச்சி  காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண