Breaking News LIVE: ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது - அரசு சுரங்க ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தகுதி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அழைத்து ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
73 ஆண்டு கால வரலாற்றை கொண்டது திமுக என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு முதலில் திமுக தேர்தல் களத்தை சந்தித்தது - முதல்வர் ஸ்டாலின்
6 ஆவது முறையாக திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி அடைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
73 ஆண்டு கால வரலாற்றை கொண்டது திமுக என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு முதலில் திமுக தேர்தல் களத்தை சந்தித்தது - முதல்வர் ஸ்டாலின்
6 ஆவது முறையாக திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி அடைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் வரும் மே 8 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்பாண்ட் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போன்று, இலங்கை பொருளாதார நெருங்கடியை சுமக்க இந்தியாவும் பிரதமர் மோடியும் தயார் என்று இலங்கை சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி முதல் நாடாக ஜெர்மனி சென்றுள்ளார்.
இந்தியாவில் ஒரேநாளில் 2, 723 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 3,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 6ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் 15ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது பிரிவில் மட்டும் 203 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Background
சென்னையில் 26ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -