Breaking News LIVE: நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

சென்னையில் 25வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்ர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Continues below advertisement
20:11 PM (IST)  •  01 May 2022

சென்னை- மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் - முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

20:02 PM (IST)  •  01 May 2022

நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கியப்பங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின்.

நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத்துறை. 

16:37 PM (IST)  •  01 May 2022

கல்லூரி துணை முதல்வருக்கு மதுரை டீன் பொறுப்பு !

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு பதிலாக மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பை துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

16:20 PM (IST)  •  01 May 2022

கிராமத்தை தத்தெடுத்தார் கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை கிராமத்தை தத்தெடுத்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

12:17 PM (IST)  •  01 May 2022

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், மே 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

10:11 AM (IST)  •  01 May 2022

மே தினத்தையொட்டி முதலமைச்சர் உறுதிமொழி ஏற்பு

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

09:16 AM (IST)  •  01 May 2022

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,324 ஆக குறைவு

இந்தியாவில் ஒரேநாளில் 3,324 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 5,23,843 பேர் உயிரிழந்துள்ளனர்.

09:08 AM (IST)  •  01 May 2022

மே தின தூணில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மே தின தூணில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

09:03 AM (IST)  •  01 May 2022

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்வு. அதன்படி தற்போது ரூ.2355.50க்கு விற்பனை

08:18 AM (IST)  •  01 May 2022

நடிகர் அஜித்துக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உழைப்பால் உயர்ந்து பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட அஜித்குமாருக்கு  வாழ்த்துகள் - ஓபிஎஸ்

08:14 AM (IST)  •  01 May 2022

இன்று கிராமசபைக் கூட்டங்கள்

தொழிலாளர் தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. கோடை வெயில் காரணமாக காலை 10 மணிக்கு கிராமசபைக் கூட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

08:13 AM (IST)  •  01 May 2022

மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் 8 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பிறகு மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

08:13 AM (IST)  •  01 May 2022

மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்குகிறார் தோனி

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டனாக தோனி இன்று மீண்டும் களமிறங்குகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம்  வழங்கினார் ரவீந்திர ஜடேஜா.

08:13 AM (IST)  •  01 May 2022

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 25வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை விற்கப்படுகிறது.