Breaking News Live: காஷ்மீர் : பேருந்தில் தீ - 2 பக்தர்கள் பலி

Breaking News Live Updates: தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 13 May 2022 06:10 PM
காஷ்மீர் : பேருந்தில் தீ - 2 பக்தர்கள் பலி

ஜம்மு- காஷ்மீரின் கட்ரா பகுதியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 2 பேர் பலி. 22 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம். 

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு : கொலையாளிகளுக்கு 5 நாள் காவல்

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

யூஏஇ அதிபர் ஷேக் கலிஃபா பின் சையத் காலமானார்..!

ஐக்கிய அரபு அமீகர அதிபர் ஷேக் கலிஃபா பின் சையத் (வயது 73) உடல்நலக்குறைவால் காலமானார். 

பேரறிவாளனை விடுவிக்க குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு : மத்திய அரசு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு மட்டும் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

ட்விட்டரை வாங்குவது தற்காலிக நிறுத்தம் : எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

ட்விட்டர் பக்கத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காமராஜர் பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்..?

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான வரும் ஜூலை 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவு - அமைச்சர் கே.என். நேரு

மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வை நடத்த தடையில்லை - உச்சநீதிமன்றம்

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை வரும் 21-ந் தேதி திட்டமிட்டபடி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தொடங்கும் ஜூன் 1-ந் தேதிக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேடவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை திறந்த முதலமைச்சர்

மேடவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்க கனமழை பெய்வதற்கான வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நாளை குடும்ப அட்டை முகாம்

சென்னையில் நாளை குடும்ப அட்டை முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்காடு கோடை விழா வரும் 26ஆம் தேதி தொடக்கம்:

ஏற்காடு கோடை விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.

வட கொரியாவில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு பதிவு

வடகொரியா நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் !

தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Background

தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% வரை ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.