Breaking Live: தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல்..
தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களைத் தேர்தல். தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட 57 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது
தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 4,835 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ பிடித்தது. விமானம் ஓடு பாதையில் இருக்கும் போது தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தின் மச்சிலிபட்டினம்-நார்ஸ்பூர் இடையே கரையை கடந்தது.
Background
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் அசானி புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அசானி புயல் நேற்று ஆந்திராவில் கரையை கடந்தது. எனினும் அடுத்த 4 நாட்டுகளுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -