Breaking Live: ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை-முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 11 May 2022 10:37 AM
ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  அனைத்து துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:

கடலூரின் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.

அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானம் ரத்து

ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசானி புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வலுவிழந்த அசானி புயல்:

அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. அசானி புயல் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Background

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.