Important Protests Freedom Fight: ஆங்கிலேயர்களை மிரள வைத்த சம்பவங்கள்.. சுதந்திரத்திற்கான முக்கிய போராட்டங்களின் பட்டியல்

இந்தியா சுதந்திரம் பெறுவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சில போராட்டங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

இந்தியா சுதந்திரம் பெறுவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சில போராட்டங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

சுதந்திர போராட்டம்:

எழுத்துரிமை, பேச்சுரிமை இழந்து சொந்த நாட்டிலேயே அடிமைப்பட்டு கிடந்த இந்தியர்கள், சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கான முதல் விதையை 1800-களின் தொடக்கத்திலேயே தமிழர்களால் விதைக்கப்பட்டது. ஆனால், அது வளர்ந்து விருட்சமாய் மாற 150 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே சுதந்திரம் வேண்டி எத்தனையோ ஆயிரக்கணக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இதில் சிறிய போராட்டம், பெரிய போராட்டம் என்ற வேறுபாடு எல்லாம் எதுவும் இல்லை. சுதந்திரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு போரட்டமுமே, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான ஒரு முன்னேற்றமாகவே அமைந்தது. அந்த சிறுபொறி கொண்டு பற்றி எரிந்து வெடித்து பெரும் போராட்டங்களாய் வலுப்பெற்று, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டே வெளியேற்றிய சில முக்கிய போராட்டங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சிப்பாய் கலகம்:

நாட்டிலேயே முதலாவதாக மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து இருந்தாலும்,   1857-ம் ஆண்டு மீரட்டில் நடைபெற்ற சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திர போராட்டமாக கருதப்படுகிறது. அந்த நகரில் இருந்த இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இந்த  எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது.  இதில் விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.  இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் இணைந்து  டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். ஆனால், இந்த போரட்டம் தோல்வியையே சந்தித்தது.

சுதேசி இயக்கம்:

1905 ஜூலையில் வங்காளப் பிரிவினையை அப்போதைய இந்தியாவின் வைஸ்ராய் பிரபு கர்சன் அறிவித்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிப்பதே இதன் இலக்கு. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிலை மேம்பட்டதோடு,  இந்தியர்கள் தற்சார்புடன் வாழ முடியும் என்றும் ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தினர். பிரிட்டிஷ் பொருட்கள் பகிரங்கமாக எரிக்கப்பட்டபோது இந்த இயக்கம் வன்முறையாக மாறியது. இந்தப் பிரச்னையை எதிர்த்துப் போராட, ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியாளர்களைக் கைது செய்யத் தொடங்கினர். இறுதியாக வங்காளம் பிரிக்கப்பட்டடாலும், இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திய சுதேசி இயக்கம் சுதந்திர போராட்டத்தில் ஒரு மைல்கல் ஆகும்.

சத்தியாகிரக இயக்கம்:

முதல் சத்தியாகிரகம் 1917 இல் பீகாரில் உள்ள சம்பாரனில் தொடங்கப்பட்டது. சத்தியாக்கிரகம் என்பது ஒரு வன்முறையற்ற எதிர்ப்பு முறையாகும். இது செயலற்ற எதிர்ப்பு என்றும் புரிந்து கொள்ளலாம். 'சத்யாகிரகம்' என்ற வார்த்தை முதன்முதலில் ரௌலட் சட்டப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்டது. கீழ்ப்படியாமை, உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், ஒத்துழையாமை மற்றும் தன்னார்வ நாடுகடத்தல் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்ட சில நுட்பங்கள் ஆகும். 

ஜாலியன் வாலாபாக்:

தீவிரவாத தேசியவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சர் ரவுலட் ரவுலட் புதிய சட்டத்தை இயற்றினார், அதன் படி, எந்த நபரையும் சிறிய சந்தேகத்தின் அடிப்படையில் கூட கைது செய்யலாம். சட்டம் 1919 இல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் உள்ள திடலில் கூடிய மக்களை,  ஜெனரல் டயர் என்பவன் தனது படைகளை கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.  ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த இந்த சம்பவம், இந்தியர்களிடையே இருந்த சுதந்திர கனல் கொழுந்து விட்டு எரிய  காரணமானது.

ஒத்துழையாமை இயக்கம்:

1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த மகாத்மா காந்திக்கு நாட்டில் சுதந்திரத்திற்காக நடக்கும் போராட்டம் புதிய உத்வேகம் பெற்றிருந்ததை மகிழ்ச்சியளித்தது. இதனை தொடர்ந்து 1920ம் ஆண்டு  நாடு தழுவிய அளவில் அவர் உருவாக்கியது தான் ஒத்துழையாமை இயக்கம்.  அதன் மூலம், பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களை புறக்கணித்து இந்திய நாட்டின் உற்பத்தி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  பிரிட்டீஷ் அரசின் எவ்வித செயல்களுக்கும் யாரும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது, நீதிபதிகள் உள்ளிட்ட யாரும் பணிக்கு செல்லக்கூடாது. அரசின் கூட்டங்களில் மக்கள் பங்கேற்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அனைத்து தரப்பினரும் பின்பற்றியதா,  இந்த இயக்கம் சுதந்திரத்திற்கான முக்கிய பங்காற்றியது. 

சட்டமறுப்பு இயக்கம்:

ஆங்கிலேய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளுக்கு எதிராக 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் முன்னெடுக்கப்பட்டதே சட்டமறுப்பு இயக்கம். காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்களின் அடக்குமுறையையும் மீறி அகிம்சை வழியில் மறுப்பு தெரிவித்து எதிர்த்து நின்றது இந்த இயக்கம். இந்த இயக்கம் கீழ்படியாமை இயக்கத்தின் ஆரம்பமாகவும் அமைந்தது.

கீழ்ப்படியாமை இயக்கம்:

ஆங்கிலேயர்கள் உப்பு விற்பதற்கும் சேகரிப்பதற்கும் வரி விதித்த பிறகு, இந்தியர்கள் கொந்தளித்தனர். உணவில் அடிப்படைப் பொருளாக உள்ள உப்பு வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. இதையடுத்து உருவான கீழ்படியாமை இயக்கம் நாடு முழுவதும் பரவியது. உப்பு சத்தியாகிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால்,  மகாத்மா காந்தி உட்பட 60,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காந்தி 1931 இல் விடுவிக்கப்பட்டார். 

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

ஆகஸ்ட் 1942ம் ஆண்டு ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும் நோக்கத்துடன், காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக முழுவதுமாக கீழ்ப்படியாமை அறிவித்தனர். "பாரத் சோடோ அந்தோலன்" என்று பிரபலமான இந்த இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இந்தியாவை விட்டு வெளியேறுவது பற்றி சிந்திக்க வைத்தது. அதன் இறுதியாகவே 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்திஅ

Continues below advertisement
Sponsored Links by Taboola