இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி( நாளை) கொண்டாடுகிறது. அதே போன்று பாகிஸ்தானும் 75-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அதையொட்டி இரு நாட்டு ராணுவ வீரர்களும், வாகா-அட்டாரி எல்லையில் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம்:


1947 ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளடக்கிய நிலப்பகுதிகளை ஆங்கிலேயர்கள்  ஆட்சி செய்து வந்தனர். பின்னர் நாட்டு தலைவர்களின் போரட்டத்தால், ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்தன. 


இதையடுத்து இரு நாடுகளும் பிரிந்து சென்றன. மேலும் சுதந்திரமாக இருந்த பகுதிகள் இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அல்லது தனியாக இருந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. 


தனியாக பிரிந்து செல்ல முடிவெடுத்த பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ம் தேதி, சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து, இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


அட்டாரி- வாகா எல்லை:


இந்நிலையில், இரு நாடுகளின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இரு நாடு வீரர்களும், நாடுகளின் எல்லையில் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். பாகிஸ்தான் எல்லையான அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையான வாகாவில், இந்தியா துணை ராணுவ படையான எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.




நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து கொண்டாடி வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளை மத்திய அரசு கடந்த ஓராண்டாக நிகழ்த்தி வருகிறது. இதையடுத்து, 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.


அதன் அடிப்படையில், நாடுமுழுவதும் உள்ள மக்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தங்களது வீடு மற்றும் அலுவலங்களில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கீழே காணலாம்.


நடிகர்கள், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் முகப்பு படங்களிலும், கவர் ஃபோட்டோக்களிலும் தேசியக்கொடியை வைத்து சுதந்திர விழா தினத்துக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், நாட்டு மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியும், சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.


Also Read: ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண