நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



’எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நமது 100வது சுதந்திர தினம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன்’ எனக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருக்கிறார். 





பிரதமர் நரேந்திர மோடி, ‘அம்ருத் மஹோத்ஸவ் எனக் கொண்டாடப்படும் நாட்டின் இந்த 75வது சுதந்திர தினவிழா நாட்டு மக்களிடையே புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் ஏற்படுத்தட்டும்.’ என ட்வீட் செய்துள்ளார். 





முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்தில், ‘இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.






அனைத்துத் துறைகளிலும் - வியத்தகு முன்னேற்றத்தை அடையும் இலக்குடன், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்தி - தமிழ்நாடும் - இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற்றிடப் பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம்’ என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்