இரட்டை இலை சின்னத்தை பெற இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட தரகர் சுகேஷ் சந்திரசேகர் அந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தாலும் வேறு சில வழக்குகளில் சிக்கி இப்போதும் டெல்லி திகார் சிறையிலேயே இருக்கிறார்.


சினிமாவில் பார்க்கும் கோடீஸ்வரர்கள் போல வாழ்க்கை


அவர் வெளியில் இருந்தபோது கோடீஸ்வரர்களை போல பெரிய பங்களா, சொகுசு கார்கள் என குபேரன் கணக்காக வாழ்ந்தவரை இரட்டை இலை வழக்கில் அலேக்காக தூக்கி சிறையில் போட்டது காவல்துறை. அதிலிருந்து வெளியே வந்தாலும் இன்னும் சில வழக்குகளில் சிக்கியவர் இதுநாள் வரை திகார் சிறையிலேயே காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறார். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் என்பதை போன்று அவருக்கான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.


கோடி கணக்கில் வரி ஏய்ப்பு


அவர் கோடி கணக்கில் வருமான வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றியதால் அவர் வசம் உள்ள சொகுசு கார்களை வருமான வரித்துறை இன்று ஏலம் விட்டது. அடேங்கப்பா ரேஞ்சுக்கு அவ்வளவு கார்களை வைத்திருந்திருக்கார் சுகேஷ் சந்திரகேசர். ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், ஜாகுவார் உள்ளிட்ட 13 சொகுசு கார்கள் இன்று ஏலம் விடப்பட்டிருக்கின்றன.


308 கோடி ரூபாய் வரை மோசடி


308 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ள சுகேஷ் சந்திரசேகர் அயோத்தியில் கட்டப்பட்டும் வரும் ராமர் கோயிலுக்கு 11 கிலோ எடையுள்ள தங்க கிரிடத்தை தருவதாக கடிதம் எழுதியுள்ளார்.           அந்த தங்க கிரீடம் முழுவதும் 5 காரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்றும் அதன் உச்சியியில் உள்ள வைரம் மட்டும் 50 காரட் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை பார்த்து வருமான வரித்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று திருப்பதி கோயிலுக்கும் அவர் மணிமகுடம் தருவதாகவும் கூறியுள்ளார்.






இதே போன்று இன்னும் ஆயிரக்கணக்கான கோடிகள் பணமும் நகைகளும் கார்கள் உள்ளிட்ட் ஆடம்பர பொருட்களும் சுகேஷ் சந்திரசேகர் வசம் ஏராளமாக இருப்பதாகவும் அவரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்து எப்படி இதுவெல்லாம் வந்தது என விசாரித்தால் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் என்றும் கர்நாடகா மாநில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


குறுக்கு வழியில் பணம் பார்த்த சுகேஷ்


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சுகேஷ் சந்திரசேகர் மங்காத்தாவில் அஜித் Money, Money, Money என்று வெறித்தனமாக சொல்வதுபோல தன்னுடைய வாழ்க்கையில் கோடிஸ்வரர் ஆகிவிடவேண்டும் என்று வெறியோடு செயல்பட்டவர். நேர்மையாய் செயல்பாட்டால் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆகிவிடமுடியாது என்று உணர்ந்த அவர் குறுக்கு வழிகளில் பணம் பார்கத் தொடங்கினார்.


சதுரங்க வேட்டை பட பாணியை பின்பற்றிய சுகேஷ்


அமைச்சரின் மகன், முதல்வரின் வளர்ப்பு மகன், பிரதமர் அலுவலக அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பெயரில் சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றத் தொடங்கிய சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருக்கும் வி.ஐ.பிக்களின் உறவினர்களை நாடி அவர்களை வெளியில் கொண்டுவருவது என்னுடைய பொறுப்பு என்று அவர்கள் நம்பவதுபோன்ற எல்லா சித்து வேலைகளையும் செய்து கோடிக் கணக்கில் பணத்தை ஆட்டையை போட்டார். இப்படி பல்வேறு பிரபலங்களை ஏமாற்றிய சுகேஷ் சந்திரசேகர் தமிழ்நாட்டு மக்களிடையே பிரலமானது டிடிவி தினகரனிடம் பணம் பெற்று தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்தான். இந்த வழக்கில் டிடிவி தினகரன் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.


சிறையில் இருப்பவர்களை வெளியே கொண்டுவருகிறேன் என்று சொல்லி ஏமாற்றியவர் அதே சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டார். இன்னும் அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை