ஆதார் - பான் கார்ட்களை இணக்காத நபர்கள் குறிப்பிட்ட 15 பணப்பரிவர்த்தனகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


ஆதார் - பான் இணைப்பு:


மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக வழங்கப்பட்ட அவகாசம் கடந்த ஜுன் 30ம் தேதி நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதனை மீண்டும் செயல்படுத்த ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவதோடு, 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயனாளர்கள் பல முக்கிய பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.


மேற்கொள்ள முடியாத பணப்பரிவர்த்தனை பட்டியல்:



  • நேர வைப்பு மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் போன்ற குறிப்பிட்ட கணக்குகளை தவிர, வழக்கமான புதிய வங்கிக் கணக்கை பயனாளரால் தொடங்க முடியாது

  • பான் கார்ட் இல்லாமல் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது சாத்தியமில்லை

  •  செபி உடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் டிமேட் கணக்கைத் திறப்பது கட்டுப்படுத்தப்படும்

  •  ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.50,000-க்கு மேல் பணமாக செலுத்த முடியாது

  • 50,000 ரூபாய்க்கு மேல் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரொக்கப் பணம் செலுத்துதல் அல்லது ஒரே நேரத்தில் வெளிநாட்டு நாணயத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடும்

  • ரூ. 50000-க்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால் பான் கார்ட் இல்லாமல் செய்ய முடியாது

  •  நிறுவனங்களால் வழங்கப்படும் கடனீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றை பெறுவதற்கு ரூ.50,000 வரையில் மட்டுமே செலுத்த முடியும்

  • இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் பத்திரங்களின் மதிப்பு ரூ. ரூ. 50,000-க்கு மேல் இருந்தால் அதனை வாங்க முடியாது

  • வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.50,000-க்கு மேல் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்

  •  வங்கி வரைவோலைகள், பே ஆர்டர்கள் அல்லது காசோலைகளை மூலம் பணம் எடுக்க வேண்டி இருந்தால், ஒருநாளைக்கு ரூ.50,000-க்கு மேல் எடுக்க முடியாது

  • ரூ. 50,000-க்கு மேலான கால வைப்புத் தொகையைத் திறப்பது அல்லது  வங்கிகள், தபால் நிலையங்கள், நிதிகள் அல்லது என்பிசிகள் மூலம் ஒரு நிதியாண்டில் மொத்தமாக ரூ.5 லட்சம் பெறுவது தடைசெய்யப்படும்

  • ரூ.50,000-க்கு மேல் மொபைல் வாலட்கள் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் பேமெண்ட்களை மேற்கொள்ள முடியாது

  • ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டாளர் ஒரு நிதியாண்டில் ரூ.50,000 செலுத்த பான் கார்ட் அவசியம்

  • பத்திரங்களை (பங்குகள் தவிர) விற்பனை அல்லது வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான பரிவர்த்தனை ரூ.1 லட்சத்திற்கு கட்டுப்படுத்தப்படும்

  • பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குகளை ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு விற்பது அல்லது வாங்குவதற்கு பான் கார்ட் அவசியம்