வடகிழக்கு இந்தியாவின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்று அசாம். அந்த மாநிலத்தில் அமைந்துள்ளது தேமாஜி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோனை சரகத்திற்கு உட்பட்டது அபமனோலா கிராமம். இந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அங்குள்ள பிரார்த்தனை கூடத்தில் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.


வயிற்றுவலி, வாந்தி:


இதையடுத்து, கடந்த 5-ந் தேதி இரவு வழக்கம்போல வழிபாடு கூடத்தில் வழிபாடு நடைபெற்றுள்ளது. அங்கு நடக்கும் வழிபாடு செய்து முடித்த பிறகு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல, அங்கு வழிபாடு செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் அந்த வழிபாடு கூடத்தில் வழிபாடு செய்துள்ளனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.


அவர்களில் பிரசாதத்தை சாப்பிட்ட உடன் சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலி  ஏற்பட்டுள்ளது. சிலருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்துள்ளனர். தொடர்ந்து பலருக்கும் இதே நிலைமை ஏற்பட, அக்கம்பக்கத்தினரும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


80 பேர் மருத்துவமனையில் அனுமதி:


தகவலறிந்த மருத்துவக்குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அபமனோலா பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வரை தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தேமாஜி மற்றும் சிலாபதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. பிரசாதமாக பக்தர்களுக்கு பச்சைப்பயறு மற்றும் கொண்டைக்கடலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


காரணம் என்ன?


பிரசாதம் சாப்பிட்டவர்களின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என்ன? இந்த அசம்பாவித சம்பவத்திற்கு காரணம் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரசாதம் சாப்பிட்டவர்களில் பெண்கள் உள்பட 80 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Rs.1000 Ration Card : மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: யாரெல்லாம் தகுதியானவர்கள்? யாருக்கெல்லாம் இல்லை? எங்கு விண்ணப்பிக்கவேண்டும்?


மேலும் படிக்க: Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..!