காவல்துறை அலுவலர், கொள்ளையர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான துரத்தல் சம்பவம் இறுதியில் துப்பாக்கிச்சூட்டுடன் முடிவடைந்துள்ளது.


டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர், காயங்கள் ஏற்பட்ட போதிலும் அதை பொருட்படுத்தாமல் ஒரு கொள்ளையனைப் பிடித்துள்ளார். கைதான கொள்ளையர் 30 வழிப்பறி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






தலைமைக் காவலர் சேத்தன் மற்றும் கான்ஸ்டபிள் பிரதீப் ஆகியோர் காரில் ரோந்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​காலை 10.30 மணியளவில் ஒரு கொள்ளைக்காரனும் அவரது கூட்டாளியும் மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் அப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.


பவானாவின் செக்டார் 1ல் உள்ள போக்குவரத்து ரவுண்டானா அருகே 24 வயதான இர்ஃபான் மற்றும் ராகுல் என அடையாளம் காணப்பட்ட இருவரையும் போலீசார் கண்டனர். அவர்களது பைக்கின் நம்பர் பிளேட் காகிதத்தால் மூடப்பட்டிருந்தது.


அவர்கள் வேகமாக செல்ல முயன்றபோது, ​​தலைமைக் காவலர் சேத்தன் காரை வழி மறித்ததால், இருவர் பைக்கில் இருந்து விழுந்தனர். இர்ஷாத், ஹெட் கான்ஸ்டபிள் சேட்டனின் வலது தோளில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது, பிரதீப் முதலில் அவர்களை எச்சரித்தனர். பின்னர், தனது சர்வீஸ் ரிவால்வரால் குற்றவாளிகளை கால்களில் சுட்டார்.


கான்ஸ்டபிள் பிரதீப் துரத்தி சென்ற போதிலும், ராகுல் தப்பி ஓடிவிட்டார். இர்ஷாத் கைது செய்யப்பட்டார். இவரும் ராகுலும் அப்பகுதியில் உள்ள ஜேஜே காலனியில் வசித்து வந்துள்ளார்கள். பைக் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






இதுகுறித்து துணை காவல் ஆணையர் பிரிஜேந்திர யாதவ் கூறுகையில், "சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இர்ஷாத் மற்றும் போலீஸ்காரர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெட் கான்ஸ்டபிள் சேத்தன் முன்மாதிரியாக செயல்பட்டு துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். காயம் அடைந்த பிறகும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண