தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக, விஜய் தனது தொண்டர்களுக்கு முதல்முறையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டதாகவும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அக்.15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படும் -சென்னை மாநகராட்சி


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள்  அனைத்தும் தூர்வாரி முடிக்கப்பட்உம் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்


பிரதமர் மோடி ஆலோசனை


இஸ்ரேல் - லெபனான் இடையேயான மோதல் ஈரான் வரை நீடித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், pஇரதமர் மோடி இன்று பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் குழுக்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ராணுவம், நி, வெளியுறவுத்துறைகளின் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் 5 மொழிகளுக்கு ”செம்மொழி” அங்கீகாரம்


மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என 5 மொழிகளுக்கு ”செம்மொழி” அங்கீகாரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவை ஏற்கனவே செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இளமை ஊஞ்சலாடும் என ரூ.35 கோடி மோசடி


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இளமையாக்குவதாகக் கூறி வயதானோர் பலரிடம் ரூ.35 கோடி வரை மோசடி செய்த தம்பதிக்கு போலீஸ் வலை. இஸ்ரேலில் இருந்து வாங்கிய டைம் மெசின் மூலம் 60 வயதானவரை, 25 வயதுக்கு மாற்ற முடியும் என விளம்பரம். ராஜீவ் துபே - ராஷ்மி துபே தம்பதி, சிகிச்சைக்கு ₹90,000 வரை கட்டணமாக வசூலித்துள்ளனர். ரூ.10.75 லட்சம் ஏமாந்த நபர் அளித்த புகாரால் சிக்கியுள்ளனர்.


Cold Play இசை நிகழ்ச்சிக்கு கள்ளச்சந்தையில் விற்பனையாகும் டிக்கெட்டுகள்!


2025 ஜனவரியில் மும்பையில் நடைபெறவுள்ள COLD PLAY இசை நிகழ்ச்சிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளது BOOK MY SHOW நிர்வாகம். முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் BOOK MY SHOW தெரிவித்துள்ளது


ரேடியோக்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்


1,257 தனித்துவமான ரேடியோக்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம் சிங் பவுத். 1920 முதல் 2010 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேடியோக்களை சேகரித்து வைத்துள்ளார். இவரிடம் மொத்தம் 1400 ரேடியோக்கள் உள்ளன. அதில் 1,257 தனித்துவம் வாய்ந்தவையாகும்


ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதிச் சடங்கு


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஈரானில் இருந்தபடி பிரார்த்தனை செய்ய உள்ளார்


லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்


இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்ப்பு தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தவும் திட்டம்


மகளிர் டி-20 உலகக் கோப்பை - இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை


ஐசிசி பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது