திமுக பவளவிழா பொதுக்கூட்டம்
திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் உடன், திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.7,095-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 101 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்!
ஓசூர் அருகே செல்போன் ஆலையில் தீ விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் இயங்கிவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஆலையிலிருந்த பணியாளர்கள் வெளியேற்றம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.
ஏடிஎம் கொள்ளையில் வெளிவந்த புதிய தகவல்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள SBI ஏடிஎம்-ஐ கிரெட்டா காரில் வந்து நோட்டமிட்டதாகவும், ஒரு ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க அவர்கள் வெறும் 15 நிமிடங்களே எடுத்துக் கொள்வதாகவும் போலீஸ் விசாரணையில் அம்பலம்! கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி ஏடிஎம்-களை கண்டறிந்து, பல நாட்கள் நோட்டமிட்டு, பின்பு வெல்டிங் இயந்திரங்களை கொண்டு ATM மெஷின்களை அறுத்து பணத்தை திருடுவதே மேவாட் கொள்ளையர்களின் வழக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர்
கார் பந்தய அணியை தொடங்கிய AK
'அஜித் குமார் ரேஸிங்' என்ற புதிய கார் பந்தய | அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக│ அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 992 GT3 கப் பிரிவில் 'அஜித் குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் மீது FIR பதிய நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுவில் குற்றச்சாட்டு
ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு?
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கிட்ட தட்ட 1000 கிலோ எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல். இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் தரைமட்டம்; இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு - தூதர்கள் வெளிநடப்பு
உயிர்களை பறிக்கும் எந்திரமாக இஸ்ரேல் மாறிவிட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநா பொதுசபையில் வெனிசுலா, தெற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். நேற்று ஐநா பொதுச் சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நாடுகளின் தூதர்கள் வெளிநடப்பு
ஆஸ்திரேலியாவை சுருட்டிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 313 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 126 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 2-2 என சமநிலை அடைந்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் போட்டி தாமதம்
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2வது நாள் ஆட்டம் மழையால் இன்னும் தொடங்கவில்லை. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்துள்ளது.