சென்னையில் நடந்தேறிய கொடூர சம்பவம்


 துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட கொடூரம். சடலமாக இருந்தவர் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை


ஐ.ஏ.எஸ்., எனக் கூறி ஏமாற்ற முயன்ற பெண் கைது


ஐ.ஏ.எஸ். எனக்கூறி நெல்லை, தூத்துக்குடி எஸ்.பி.க்களை ஏமாற்ற முயன்ற பெண் மற்றும் பாஜக நிர்வாகி கைது. நேற்று நடந்த குறைதீர்ப்பு முகாமில், நெல்லை எஸ்.பி.யிடம் மங்கையர்கரசி என்பவர் ஐ.ஏ.எஸ். எனக்கூறி தனக்கு வேண்டப்பட்ட ரூபிநாத் என்பவருக்கு துப்பாக்கி லைசன்ஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பிற்பகலில் தூத்துக்குடி சென்று அங்கு எஸ்.பி.யிடம் தன்னை பணமோசடி செய்துவிட்டதாக புகாரளித்துள்ளார். விசாரணையில் அவர் ஐ.ஏ.எஸ். இல்லை என தெரியவந்ததால், இருவரும் கைது.


இன்ஸ்டாகிராம் காதல் - கணவரைக் கைவிட்டு வேறு ஒருவருடன் திருமணம்


இன்ஸ்டாகிராமில் காதலித்து, மேற்கு வங்க இளைஞரை தமிழ்நாட்டில் திருமணம் செய்த அசாம் பெண்ணை, போலீசாருடன் வந்து அறுைத்துச் செல்ல காத்திருக்கும் தந்தை. தமிழ்நாட்டில் தங்கி உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் மலிக்கான் (24) என்ற -இளைஞரை சுஷ்மிதா பால் (20) திருமணம் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமான நிலையில் அவர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் தான் ஒருமாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறி தந்தையுடன் செல்ல மறுத்துள்ளார்.


திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - சந்திரபாபு நாயுடு


முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியின்போது திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.


ராஜஸ்தானில் 2.5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த துயரம்


ஜோத்புரியா என்ற இடத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டர வயது சிறுமி, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 35 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்.


வெளிநாட்டவர்களுக்கான அனுமதியை குறைக்க கனடா திட்டம்:


வேலை, கல்விக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான அனுமதியை, கணிசமாக குறைக்கிறது கனடா அரசு! நாட்டின் தற்காலிக குடியேறிகளை குறைக்கும் விதமாக இந்நடவடிக்கை *என தகவல், இந்தியாவில் இருந்து கல்வி, வேலைக்காக அதிகமானோர் கனடா செல்லும் நிலையில், இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும்


லவ் டார்ச்சர்: கணவர போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த மனைவி


வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் சுமார் 100 முறை ஃபோன் செய்து தொந்தரவு செய்த கணவர் ஜப்பானில் கைது. ஃபோன் செய்து எதுவுமே பேசாமல் மனைவி கடுப்பாகும் வரை காத்திருந்துவிட்டு கட் செய்து வந்துள்ளார். முதலில் யார் என்று தெரியாமல் குழம்பிய மனைவி, ஒரு நாள் தனது கணவர் தன்னுடம் இருக்கும்போது அழைப்புகள் ஏதும வராததை உணர்ந்து போலீசில் புகார். அளித்துள்ளார். மனைவி மீது கொண்ட காதலால் இப்படி செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


லெபனானில் வாக்கி-டாக்கீஸ் வெடித்து 14 பேர் பலி


செவ்வாயன்று அடுத்தடுத்து பேஜர்கள் வெடித்த நிலையில், நேற்று ஏராளமான வாக்கி-டாக்கீஸ் வெடித்து சிதறியுள்ளன. இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 300 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என லெபனான் கூறி வருகிறது.


தடுமாற்றத்தில் இந்திய அணி


வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றம். கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களிலும்,  மற்றும் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


செஸ் ஒலிம்பியாட் - இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம்


ஹங்கேரியில் நடைபெறும் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில், சீன வீரரை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தினார் இந்திய வீரர் குகேஷ். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.