ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை!


அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான  ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை. தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை. தமிழ்நாடு உடனான 30 ஆண்டுகால உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாக முதலமைச்சர் தகவல்.


தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல்


நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல். கார்த்தி, சண்முகம், ராமையன், தேவராஜ் உட்பட 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. 5 லட்சம் மதிப்பிலான 700 கிலோ எடையிலான வலைகள் கொள்ளை


நடிகர் ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி குற்றச்சாட்டு


திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல - ஆர்த்தி


மணிப்பூருக்கு விரையும் 2000 CRPF வீரர்கள்!


மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த தெலங்கானா, ஜார்கண்ட்டில் இருந்து 2000 CRPF வீரர்களை சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி வைத்தது மத்திய அரசு


ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ட்ரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


மினி லாரி கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழந்த சோகம்!


ஆந்திராவில் ஏலூரு அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க மினி லாரியை திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த பரிதாபம் - ஓட்டுநர் தப்பி ஓட்டம். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை


கச்சா எண்ணெய் விலை சரிவு!


கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் சரிவு. ஒரு பீப்பாய் விலை $69.51க்கு விற்கப்படும் நிலையில் இதன் பலனை மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்காமல், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தல்


செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்


ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ்' ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடக்கம். |மொத்தம் 197 அணிகள் மோதல், ஆண்கள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி பங்கேற்பு


தேர்தல் விவாதம் - ஜன., கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு


கடந்த ஆட்சியில் டிரம்ப் செய்த தவறுகளை 4 ஆண்டுகளில் பைடன் சரி செய்துள்ளார். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் டிரம்ப். அவரது ஆட்சியில் வர்த்தகப் போர் ஏற்பட்டது. பணக்காரர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளித்தவர் டிரம்ப். சட்டவிரோத குடியேற்றத்தைத் தவிர பேச டிரம்புக்கு வேறு எதுவும் இல்லை. அரசியலமைப்பின்மீது நம்பிக்கையற்றவர் டிரம்ப் என அவருடன் பணியாற்றியவரே கூறியுள்ளார் - கமலா ஹாரிஸ்


சென்னையில் மீண்டும் கார் பந்தயம்:


இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3ம் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 14, 15 தேதிகளில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றுப் போட்டிகள் இதே ஓடுதளத்தில் நடந்து முடிந்த நிலையில், 2ம் சுற்றுப் போட்டிகள் இரவு நேர பந்தயமாக தீவுத்திடலில் ஆக.31, செப்.1ம் தேதி நடைபெற்றது.


நொய்டா மைதானத்தை நாங்கள் தான் தேர்ந்தெடுத்தோம - ஆஃப்கானிஸ்தன் அணி


நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டிக்கு கான்பூர், பெங்களூரு, நொய்டா மைதானங்களில் ஒன்றை எங்களுக்கு வழங்குவதாக பிசிசிஐ கூறியது. போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் என்பதால் நாங்கள்தான் நொய்டாவை தேர்வு செய்தோம் என ஆப்கன் அணி நிர்வாகி மென்ஹஜுதின் ராஸ் தெரிவித்துள்ளார். ஆப்கன் - நியூசி., அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெறும் நொய்டா மைதான ஆடுகளத்தில் இருந்து மழைநீர் வடியாததால் 2 நாட்கள் ஆட்டம் ரத்தான நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.